Home அவசியம் படிக்க வேண்டியவை துபாயில் ஹிருதிக் ரோஷன் – பாரிஸ் ஹில்டன் நெருக்கமா?

துபாயில் ஹிருதிக் ரோஷன் – பாரிஸ் ஹில்டன் நெருக்கமா?

584
0
SHARE
Ad

Hritik Roshan Paris Hilton in Dubaiதுபாய், அக்டோபர். 13 – இந்திப் படவுகின் முன்னணிக் கதாநாயகர் அவர். கட்டுமஸ்தான உடலழகுக்கும், பாளங்களாக செதுக்கி வைத்த உடல் தசைகளுக்கும் சொந்தக்காரர். அவரது தோற்றத்திற்காக அவர் மீது மையல் கொண்ட இலட்சக்கணக்கான இரசிகைகளைக் கொண்டவர்.

அவர்தான், அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பேங் பேங்’ என்ற இந்திப் படத்தின் கதாநாயகர் ஹிருத்திக் ரோஷன்.

அந்தப் பெண்மணி பேரழகி மட்டுமல்ல, பெரும்பணக்காரரும் கூட. ஹில்டன் என்ற மாபெரும் உலகளாவிய தங்கும் விடுதிகளின் நிறுவனத்தில் தொடர்புடையவர்.

#TamilSchoolmychoice

பல்வேறு ஹாலிவுட் கதாநாயகர்கள், பெரும் புள்ளிகளோடு கிசுகிசுக்கப்பட்டவர். பல்வேறு கவர்ச்சிப் புகைப்படங்களில், காணொளிகளில் இணையத்தில் நாள்தோறும் உலா வருபவர்.

அவர்தான் பாரிஸ் ஹில்டன்!

இந்த இருவரும், துபாயில் சந்தித்துக் கொண்டது – அளவளாவியது – எல்லாமே காத்துக் கிடக்கும் தகவல் ஊடகங்களுக்கு சரியான தீனியாகியிருக்கின்றது.

துபாய் உணவகம் ஒன்றில் முக்கிய புள்ளிகளுக்காக துவங்கப்பட்டுள்ள பிரிவின் திறப்பு விழாவில் பிரபல நடிகர் ஹிருதிக் ரோஷன் கலந்து கொண்டார். அப்போது அதே நிகழ்வுக்கு வந்திருந்த அமெரிக்க பாடகியும் நடிகையுமான பாரிஸ் ஹில்டனுடன் அவர் உரையாடியது அங்கு வந்திருந்த பலரது கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து இரு பிரபலங்களும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்தப் படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் உடனடியாக வெளியிட்டார் பாரிஸ் ஹில்டன்.
“துபாயில் ஹிருதிக் ரோஷனுடன் கழிந்த இனிய பொழுது. துபாயில் என் மனம் கவர்ந்த இடங்களில் புதிதாக இணைந்துள்ள அழகான உணவகம்,” என்று தனது டுவிட்டர் பதிவில் பாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பாரிஸ் ஹில்டனின் சகோதரி நிக்கி, பிரபல மாடல் அழகிகள் அலெஸாண்டிரா அம்ப்ரோஸியோ, இரினா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.