Home நாடு தீவிரவாத தொடர்புடைய 39 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தீவிரவாத தொடர்புடைய 39 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

490
0
SHARE
Ad

கோலாலம்பூர், அக்டோபர் 16 – அயல்நாடுகளில், குறிப்பாக சிரியா போன்ற நாடுகளில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 39 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத குழுவுடன் தொடர்புள்ள ஒரு பெண்ணும் அடங்குவார் என்றார் அவர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பின்பற்றி வரும் ‘ஜிஹாத் அல் நிக்காஹ்’ அல்லது ‘பாலியல் ஜிகாத்’ நடவடிக்கையில் மலேசியர்கள் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் இன்னும் உறுதி செய்யவில்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த கொள்கையின் மூலம், ஜிகாத் போராட்டத்தில் ஈடுபடும் போராளி ஒருவருக்கு பெண்கள் பாலியல் ரீதியான சேவைகளை வழங்க வேண்டும் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

ஐசெக உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.

தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் அகமட் சாஹிட்.