Home கலை உலகம் மூச்சுத் திணறல் காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!

661
0
SHARE
Ad

Kamal Hassanதிருவனந்தபுரம், அக்டோபர் 17 – இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் நடந்த படப்பிடிப்பில் கமல் ஹாசன் மூக்கிற்குள் ரப்பர் துண்டு சிக்கிக்கொண்டதால் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கமல்ஹாசன், கவுதமி நடிக்கும் படம் ‘பாபநாசம்‘. இதன் படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் நடந்து வருகிறது. காவல்துறை அதிகாரியாக நடிக்கும் கலாபவன் மணி, கமல்ஹாசனை தாக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து மூக்கில் அடிபட்டு வீங்குவதுபோல காட்சி முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மூக்குக்குள் ரப்பர் துண்டு வைக்கப்பட்டது.

இந்த காட்சியில் கமல் நடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரப்பர் துண்டு மூக்கிற்கு உள்பக்கமாக சென்று சிக்கிக்கொண்டது. இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை தொடுபுழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

#TamilSchoolmychoice

எண்டாஸ்கோபி (Endoscopy) எனப்படும் சிகிச்சை முறை மூலம் ரப்பர் துண்டு அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 3 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த சில வாரங்களுக்கு முன் கமலுக்கு வயிற்றுக் கோளாறு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.