Home உலகம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது – ஐரோப்பிய ஒன்றியம்!

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது – ஐரோப்பிய ஒன்றியம்!

631
0
SHARE
Ad

LTTE 440 x 215கொழும்பு, அக்டோபர் 18 – விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு பல வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கடந்த 2006-ம் ஆண்டு, 28 நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்தது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்பு விதித்த கட்டுப்பாடுகள் தற்போது பொருத்தமற்றவை என்பதால் அவற்றை நீக்க வேண்டும். இந்த உத்தரவினை 3 மாதங்களுக்குப் பின் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று அந்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கி உள்ளது, பெரும் கவலை அளித்துள்ளது. எனினும், இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகினறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.