Home நாடு எபோலாவை தடுக்க சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை!

எபோலாவை தடுக்க சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கை!

371
0
SHARE
Ad

Ebola-story

புத்ராஜெயா, அக்டோபர் 18 – மேற்கு ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருவதைத் தொடர்ந்து மலேசியாவிற்கு அந்த நோய் பரவி விடாமல் தடுக்க சுகாதாரத்துறை கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அனைத்துலக விமான நிலையங்கள் அமைந்துள்ள சிலாங்கூர், பினாங்கு, ஜோகூர் பாரு மற்றும் கோத்த கினபாலு ஆகிய மாநிலங்களில் பயணிகளில் யாரும் எபோலா நோய் தொற்றுடன் நுழைந்துவிடக் கூடாது என்பதில் சுகாதாரத்துறை மிக கவனமாக செயல்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

விமான நிலையங்களில் உடல் வெப்பத்தைக் கணக்கிடும் கருவிகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு பயணிகளின் உடல் வெப்பநிலை கவனிக்கப்பட்டு வருகின்றது.

அதிகக் காய்ச்சலுடன் வரும் பயணிகள் உடனடியாக அங்கிருக்கும் மருத்துவக் குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டு எபோலா அறிகுறிகள் இருக்கின்றதா என சோதனை செய்யப்படுகின்றனர்.

அதே வேளையில், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளில் இருந்து தரைவழியாக மலேசியாவிற்குள் நுழையும் பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர்.

கொடிய எபோலா நோயில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகின்றது என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 15 -ம் தேதி வரை 9 பேருக்கு எபோலா கிருமி தொற்றியதாக தவறான தகவல்கள் அளிக்கப்பட்டன. எனினும், அமைச்சு இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருக்காது என்றும் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எபோலா பரவியுள்ள நாடுகளில் வாழும் மலேசியர்களில் நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்கள் உடனடியாக மலேசிய தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.