Home கலை உலகம் ட்விட்டரில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்ற தனுஷ்!

ட்விட்டரில் ஒரு மில்லியன் ரசிகர்களை பெற்ற தனுஷ்!

465
0
SHARE
Ad

dhanushtwiசென்னை, அக்டோபர் 18 – ’துள்ளுவதோ இளமை’ படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த தனுஷ் ‘காதல் கொண்டேன்’, ‘திருடா திருடி’, என அடுத்தடுத்து படங்களில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டார்.

’ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைக் குவித்தார். எல்லாவற்றிற்கும் மேல் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி உச்சத்தை தொட்டார்.

தற்போது இந்தியிலும் நடித்துவரும் தனுஷ்,  பல பாடல்களுக்கு பாடல் வரிகளும் எழுதுவதோடு, இசை மேதைகள் கூட இவரது வரிகளுக்குப் பின்னணி பாடும் அளவிற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொண்டார்.

#TamilSchoolmychoice

தனுஷ் தற்போது ட்விட்டர் தளத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார். 10 லட்சத்து பத்தொன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை பெற்ற தனுஷ் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.