Home தொழில் நுட்பம் பெண் ஊழியர்களின் கருமுட்டைகளை பாதுகாக்கும் செலவை ஏற்ற பேஸ்புக், ஆப்பிள்! 

பெண் ஊழியர்களின் கருமுட்டைகளை பாதுகாக்கும் செலவை ஏற்ற பேஸ்புக், ஆப்பிள்! 

568
0
SHARE
Ad

Apple_logo-8கோலாலம்பூர், அக்டோபர் 18 – தொழில்நுட்ப உலகின் முன்னிலை வகித்து வரும் பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் பெண் பணியாளர்களின் கருமுட்டைகளை சேகரிப்பதற்கான உதவித் தொகையை ஏற்க முன்வந்துள்ளன.

சமீப காலமாக பணிச்சுமையின் காரணத்தால் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் பலர், தங்களின் குழந்தை பிறப்பை தாற்காலிகமாகத் தள்ளி வைத்து வருகின்றனர்.

இதனால் பிற்காலத்தில் அவர்களின் உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகி, வாடகைத் தாய் மூலமே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகின்றது.

#TamilSchoolmychoice

அவ்வாறான சூழலில் அவர்களின் கருமுட்டையை பாதுகாப்பது அவசியமானதாக இருக்கும். நவீன யுகத்தில் எதுவும் சாத்தியமாகும் என்பதால், பெண்களின் கருமுட்டைகளை உறைநிலையில் பாதுகாக்க சில பிரத்யேக நிறுவனங்கள் செயல்பட்டுகின்றன. எனினும் அதற்கான செலவுகள் மிக அதிகம்.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் தங்களது பெண் ஊழியர்களின் கருமுட்டைகளை சேகரிப்பதற்கு ஆகும் செலவை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனமும், 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதற்குத் தேவையான உதவித் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இரண்டு நிறுவனங்களும், கருமுட்டை சேகரிப்பிற்காக 20,000 அமெரிக்க டாலர்கள் வரை உதவித் தொகை வழங்க முன்வந்துள்ளன.

எனினும் இந்நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவது போல் காட்டிக் கொண்டாலும், அவர்களிடமிருந்து அதிக உழைப்பைப் பெறுவதற்காகவும், அவர்களின் இயல்பான தாய்மைக் காலங்களை பறிக்கும் வகையில் இந்த புதிய சலுகைகளை அறிவித்துள்ளன என்று விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.