Home உலகம் தமிழர் பகுதியில் இலங்கை மீண்டும் ஆதிக்கம் – வெளிநாட்டினர் செல்ல தடை!   

தமிழர் பகுதியில் இலங்கை மீண்டும் ஆதிக்கம் – வெளிநாட்டினர் செல்ல தடை!   

511
0
SHARE
Ad

sri-lanka_534659a1கொழும்பு, அக்டோபர் 18 – விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வந்த பொழுது இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதிகள் இருந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

போர் முடிந்தவுடன் தடையை விலக்கிக் கொண்ட இலங்கை அரசு, தற்போது அந்த பகுதிகளுக்கு மீண்டும் வெளிநாட்டினர் செல்ல அரசு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட பகுதிகளுக்கு வெளிநாட்டினர் அவசியம் செல்ல வேண்டுமானால், வெளிநாட்டினர் பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற்றால் மட்டுமே அந்த பகுதிகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வடபகுதிக்கு செல்லும் பாதையில் வவுனியா, ஓமந்தை ஆகிய இடங்களில் பலத்த இராணுவ சோதனை சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக வடபகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வரும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

srilankangovernmentfindsஇதுதொடர்பாக இலங்கை இராணுவத் தளபதி ரூவான் வணிகசூரியா கூறியதாவது:– “வடபகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல அனுமதி அளித்து வந்தோம். ஆனால் அவர்களில் சிலர் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இனக்கலவரங்களை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இதனால் அங்கு அமைதி குலையும் நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே வெளிநாட்டினருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.”

“எனினும் அவர்கள் அந்த பகுதிகளுக்கு அவசியம் செல்ல வேண்டுமானால் பாதுகாப்பு துறையிடம் முன்கூட்டியே விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.