Home அவசியம் படிக்க வேண்டியவை மின்னல் பண்பலை சார்பில் செல்லியலுக்கு நினைவுப் பரிசு!

மின்னல் பண்பலை சார்பில் செல்லியலுக்கு நினைவுப் பரிசு!

712
0
SHARE
Ad

IMG_5180கோலாலம்பூர், அக்டோபர் 18 – அரசாங்க வானொலியான மின்னல் பண்பலையின் ஏற்பாட்டில் ஊடகங்களுக்கான தீபாவளி இரவு விருந்து உபசரிப்பு நேற்று அங்கசாபுரியிலுள்ள பி.ரம்லி அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் மின்னல் பண்பலையுடன் நட்புறவுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இப்பரிசுகளை சம்பந்தப்பட்ட ஊடகப் பிரதிநிதிகளுக்கு ஆர்டிஎம் துணை இயக்குநர் டத்தோ ஹாஜி அபு பக்கார் வழங்கினார்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்வில், மின்னல் பண்பலையுடன் இணைந்து பல்வேறு முக்கிய செய்திகளையும், தகவல்களையும் பகிர்ந்து நட்புறவுடன் செயல்பட்டு வரும் நமது செல்லியல் தகவல் ஊடகத்திற்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

IMG_5176

(செல்லியல் குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன், டத்தோ பக்காரிடமிருந்து நினைவுப் பரிசினைப் பெற்றுக் கொள்கிறார்.)

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்