Home வாழ் நலம் உடல் பருமனைக் குறைக்கும் முட்டைகோஸ்!

உடல் பருமனைக் குறைக்கும் முட்டைகோஸ்!

996
0
SHARE
Ad

x12-1363090517-cabbage.jpg.pagespeed.ic._Bye_JnAqQஅக்டோபர் 18 – நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் ‘முட்டைகோசு’ முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம்.

முதலில் இதன் பயன்களை தெரிந்து கொண்டு இதை பயன்படுத்துவதா, வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள்.
முட்டைகோசு குளிர்மண்டல பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது.

இலைகள் நன்றாக பெருத்து காணப்படும். இலைகள் நன்றாக சுருண்டு உருண்டை வடிவில் இருக்கும். இவைதான் நாம் உண்ணக்கூடிய பகுதியாகும். வெளிப்பக்கத்திலிருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்திலிருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் காணப்படும்.

#TamilSchoolmychoice

cabbage112809முட்டைகோஸின் பயன்கள்:

இதன் குணம் குளிர்ச்சியாகும், ஆதலால் முட்டைக்கோசானது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் தன்மையுடையது. ஜலதோஷத்தினால் துன்பப்படுபவர்கள் முட்டைக்கோஸை நன்றாக  வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதை பயன்படுத்தினால் அத்தொல்லையிலிருந்து வெளியேறலாம். உடலை ஆரோக்கியத்துடன் வைக்க முட்டைக்கோஸ் உதவுகிறது. முட்டைக்கோஸின் சாறு உடல் பருமனைக் குறைக்கும்.

cabbage,முகப்பருக்கள் இருப்பவர்கள் வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் பருக்கள் நீங்கி முகம் பளபளப்பாகும். அஜீரணக் கோளாறுகளால் அவதிபடுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் உடலும், முகமும் இளமை தோற்றத்துடன் இருக்கும். சொறி, சிரங்கு இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.