Home உலகம் ஹாங்காங் காவல் துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது!

ஹாங்காங் காவல் துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது!

585
0
SHARE
Ad

Hongkong Protests 2 - 19 Oct - 600 x 400ஹாங்காங், அக்டோபர் 19 – ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக ஒன்றுதிரண்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஹாங்காங் காவல் துறையினருக்கும் இடையில் இன்று மோதல்கள் வெடித்துள்ளன.

சென்ட்ரலை ஆக்கிரமிப்போம் – Occupy Central – என்ற கருப்பொருளோடு ஹாங்காங்கின் நிர்வாக மையம் அடங்கிய மத்திய ஹாங்காங் நகரை ஆக்கிரமிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சீன அரசாங்கத்திற்கும், ஜனநாயகப் போராட்டவாதிகளுக்கும் இடையில் நீடித்துவரும் நெருக்கடி கடுமையான கட்டத்தை அடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்று காவல் துறையினர் தற்காப்பு கேடயங்களோடும், தலைக் கவசங்களோடும் மோங் கோக் வட்டாரத்தில் குவிந்திருக்கும் ஜனநாயகப் போராட்டவாதிகளை தடுப்புக் காவல்கள் கொண்டு தடுத்து நிறுத்தியதோடு, அவர்களை பின் நோக்கித் தள்ளினர்.

Hongkong Protests Oct 19 600 x 400

இந்த மோதலில் சுமார் 20பேர் வரை காயமடைந்தனர். ஆங்காங்கு நடைபெற்று வரும் மோதல்களினால் ஹாங்காட் நாட்டின் பல பிரதேசங்கள் நிலைகுலைந்து இருக்கின்றன.

போராட்டம் நடத்தும் மாணவர்களோடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவோம் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இரு தரப்புகளுக்கும் இடையில் மோதல்களும், போராட்டங்களும் வெடித்துள்ளன.

இதுவரை 26பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 15 காவல் துறையினர் காயமடைந்துள்ளதாகவும் அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹாங்காங் நாட்டின் உயர் பதவிகளுக்குப் போட்டியிடுபவர்களை சீன அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் – அதன் பின்னரே அவர்கள் போட்டியிட முடியும் என்ற விதியை அகற்றக் கோரி ஜனநாயகப் போராட்டவாதிகள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், அந்த விதியை அகற்ற மாட்டோம், மேலும் பல தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவோம் என கம்யூனிஸ்ட் சீன அரசாங்கம் விடாப்படியாக அறிவித்துள்ளது.

படங்கள் – EPA.