Home கலை உலகம் 2015 பிப்ரவரியில் ரன்பீர் – கத்ரினா கைஃப் திருமணமா?

2015 பிப்ரவரியில் ரன்பீர் – கத்ரினா கைஃப் திருமணமா?

575
0
SHARE
Ad

Ajab-Prem-Ki-Gazab-091013மும்பை, அக்டோபர் 20 – இந்தித் திரையுலகின் கவர்ச்சி சின்னமான கத்ரினா கைஃபும் முன்னணி நடிகர் ரன்பீர் கபூரும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தங்கள் காதல் குறித்து இருவரும் இதுவரை வெளிப்படையாக வாய் திறக்கவில்லை என்றாலும், இருவர் வீட்டிலும் மிக விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கப்போவது உறுதி என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.

கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து இருவரும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. ரன்பீர் திடீரென தனது வீட்டில் இருந்து வெளியேறி பாந்த்ராவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அடுத்த சில தினங்களிலேயே கத்ரினாவும் இதே வீட்டில் குடிபுகுந்த பின்னர், இருவருக்கும் விரைவில் திருமணம் எனும் செய்தி, இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.

இதுநாள் வரை இருவரும் பொது இடங்களுக்கு ஜோடியாக வருவதில்லை என்றாலும் திருமண பந்தத்துக்கு மனதளவில் தயாராகிவிட்டதாக தெரிகிறது.

எனவே காதலர்களுக்கு உகந்த பிப்ரவரி மாதத்தில் வாழ்க்கையில் இணைய இருவரும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இவர்களின் திருமணத்தை கோலாகலமாக நடத்த ரன்பீரின் குடும்பத்தார் தயாராகி வருகிறார்களாம்.

போபி (Bobby) படத்தின் மூலம் 70ஆம் ஆண்டுகளில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரிஷிகபூர் – நீட்டு சிங் தம்பதியரின் புதல்வர்தான் ரன்பீர் கபூர். ரிஷி கபூர் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூரின் மகனாவார். நீட்டு சிங்கும் அவர் காலத்தில் புகழ் பெற்ற நடிகையாவார்.