Home அவசியம் படிக்க வேண்டியவை ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக் கடிதம் எழுதிய ரஜினிகாந்த்!

ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக் கடிதம் எழுதிய ரஜினிகாந்த்!

552
0
SHARE
Ad

jayalalitha,சென்னை, அக்டோபர் 20 – சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி இந்திய ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மாதம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த கடிதத்தில், “நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்களது உடல் ஆரோக்கியத்துக்கும் மன அமைதிக்கும் எப்போதும் வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” என ரஜினி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா கைதால் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலை தங்களுக்கு சாதகமாக்கி, ரஜினியை பா.ஜ.க.வுக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதை அண்மைய சந்திப்புகள் உறுதி செய்து வருகின்றன.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு ரஜினி கடிதம் எழுதி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட ரஜினி கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.