Home உலகம் இந்தோனேசியாவின் 7வது அதிபராகப் பொறுப்பேற்றார் ஜோகோ விடோடோ

இந்தோனேசியாவின் 7வது அதிபராகப் பொறுப்பேற்றார் ஜோகோ விடோடோ

604
0
SHARE
Ad

Joko Widodo sworn as President 600 x 400ஜாகர்த்தா, அக்டோபர் 21 – இந்தோனேசியாவின் ஏழாவது அதிபராக ஜோகோ விடோடோ (படம்) திங்கட்கிழமை பொறுப்பேற்றார். ஜாகர்த்தாவில் உள்ள இஸ்தானா மெர்டேகாவில் நடைபெற்ற அவரது பதவியேற்பு நிகழ்வில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுவரை மூத்த அரசியல்வாதிகளும், ராணுவத்துடன் தொடர்புடையவர்களும் மட்டுமே வகித்து வந்த இந்தோனேசிய அதிபர் பதவியை, ஆற்றங்கரையோர குடிசைப் பகுதியில் வளர்ந்து ஆளான ஜோகோ விடோடோ தற்போது அலங்கரிக்கிறார்.

கடந்த ஜூலையில் இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜெனரல் பிரபோவோ சுபியான்தோவை தேர்தலில் வெற்றி கண்டார் ஜோகோ விடோடோ.

#TamilSchoolmychoice

அவரது பதவியேற்பு நிகழ்வுக்கு ஜோகோவுடன் போட்டியிட்ட பிரபோவோ சுபியான்தோ வர மாட்டார் என ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பதவியேற்பு நிகழ்வுக்கு, பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் வருகை தந்தார் பிரபோவோ சுபியான்தோ.

53 வயதான விடோடோ, அமைதியான பேச்சும் போக்கும் கொண்ட அரசியல்வாதி என்று பெயர் எடுத்தவர். அவர் அதிபராக பதவியேற்றதை ஜாகர்த்தா நகர சாலைகளில் நூற்றுக்கணக்கானோர் கூடி கொண்டாடினர்.

இதற்கு முன்பு ஜாகர்த்தா ஆளுநராக பணியாற்றி இருந்தார் விடோடோ. மேலும் மரச்சாமான்கள் (furniture) ஏற்றுமதியாளராகவும் இருந்துள்ளார்.