Home கலை உலகம் உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் வெளியாகும் பூஜை!

உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் வெளியாகும் பூஜை!

679
0
SHARE
Ad

poojai-posterசென்னை, அக்டோபர் 21 – விஷாலின் பூஜை திரைப்படம் உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் வெளியாகிறதாம். தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் கத்தியுடன் மோதுகிறது பூஜை.

ஆனால் கத்தி படம் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் ‘பூஜை’ படத்தைப் பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் கூட ‘கத்தி’ படத்தைப் பற்றித்தான் பேசி வருகின்றன. காரணம் விஜய்க்கு இருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்கள்தான்.

உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பூஜை படம் வெளியாக உள்ளதாம். தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாகிறது பூஜை.

#TamilSchoolmychoice

தெலுங்கில் சுமார் 500 திரையரங்குகள், கேரளா, கர்நாடகா மற்றும் உலகமெங்கும் வெளியாகும் திரையரங்குகளைக் கணக்கில் கொண்டால் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.