Home நாடு லீ சோங் வெய், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டாரா?

லீ சோங் வெய், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டாரா?

815
0
SHARE
Ad

lee-chong-weiகோலாலம்பூர், அக்டோபர் 22 – எந்த ஒரு முக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும் அதில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் மீது ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்படுவது விளையாட்டுத் துறையில் வழக்கமான ஒன்றாகும்.

ஊக்கமருந்து பரிசோதனையில் சில சமயங்களில் வெற்றி பெற்ற விளையாட்டாளர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் பட்டம் பறிக்கப்படுவதும் வழக்கமான நடைமுறையாகும்.

பூப்பந்து உலகில் முன்னணி விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய். அண்மையில் நடந்த ஒரு முக்கிய பூப்பந்து விளையாட்டுப் போட்டிக்குப்பின் அவர் மீது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின்வழி அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

நேற்று வெளியிடப்பட்ட தகவலின்படி ஒரு முக்கிய முன்னணி பூப்பந்து விளையாட்டாளர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி கண்டுள்ளார் என்றும் இருப்பினும் இரண்டாவது பரிசோதனை நடத்தப்பட்டு அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில் அவரது பெயர் இரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அந்த பூப்பந்து விளையாட்டாளர் தோல்வி கண்டார் என்றும் இரண்டாவது பரிசோதனை முடிவுகளுக்காக அவர் காத்திருக்கின்றார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய்யாக இருக்கலாம் என்றும் தகவல் ஊடகங்கள் ஆரூடம் தெரிவித்துள்ளன.