Home அவசியம் படிக்க வேண்டியவை மலாயாப் பல்கலைக் கழகம் இழுத்து மூடப்பட்டது! மாணவர்கள் தடைகளை மீறி உள்ளே நுழைந்தனர்!

மலாயாப் பல்கலைக் கழகம் இழுத்து மூடப்பட்டது! மாணவர்கள் தடைகளை மீறி உள்ளே நுழைந்தனர்!

554
0
SHARE
Ad

university malayaகோலாலம்பூர், அக்டோபர் 27 – இன்றிரவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அன்வார் இப்ராகிமின் உரையைத் தடை செய்வதற்காக, மலாயாப் பல்கலைக் கழகத்தின் நுழைவாயில் இரும்புக் கதவுகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

கொட்டுகின்ற மழையிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.  குடைகளைப் பிடித்துக் கொண்டும், மழைக்கோட்டுகளை அணிந்து கொண்டும் அவர்கள் அங்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.

வாயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய ‘டிரக்’ வகை வாகனம் ஒன்றின் மீது, மலாயாப் பல்கலைக் கழக மாணவர் மன்றத்தின் தலைவர் ஃபாமி சைனோல் ஏறி நின்று கொண்டிருந்தார் என்றும், மாணவர்களை பல்கலைக் கழகத்தின் வளாகத்திற்குள் அனுமதிக்கவேண்டும் என்று பாதுகாவலர்களிடம் அவர் பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும் தகவல்கள் ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

மூடிய வாயில் கதவுகளை திறப்பதற்கு பாதுகாவலர்கள் மறுத்துவிட்டதால், கூடியிருந்த மாணவர்கள், மாணவர் தலைவர் ஃபாமி சைனோல் தலைமையில் “மக்களே எழுச்சியடையுங்கள்! கதவுகளைத் திறவுங்கள். பல்கலைக் கழகத்திற்குள் நுழைவோம்” என முழங்கினர்.

பின்னர் அந்த மாணவர்கள் வாயில் கதவுகளை உடைத்துக் கொண்டு முன்னேறி அன்வார் உரை நிகழ்த்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட துங்கு சேன்சலர் மண்டபத்தை நோக்கி சென்று குழுமியுள்ளனர்.

(மேலும் விவரங்கள் தொடரும்…)