Home இந்தியா புனேயில் 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விபத்து!

புனேயில் 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விபத்து!

568
0
SHARE
Ad

pune-building-collapse-oct31-650புனே, அக்டோபர் 31 – புனே அருகே உள்ள பும்கர் மலா என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்ட 7 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்த கட்டடத்தின் சில பகுதியில் திடீரென வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. அது பற்றி வீட்டின் உரிமையாளர்கள் கட்டடத்தை கட்டிய கட்டுமான நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அந்த விரிசல் பற்றி கவலை அடைய தேவையில்லை. கட்டடம் உறுதியாக தான் இருக்கிறது என்று அந்நிறுவனம் கூறி இருக்கின்றது.

இந்நிலையில், இன்று அதிகாலை இந்த கட்டடம் திடீரென ஆட ஆரம்பித்து விழுந்துள்ளது. கட்டட இடிபாடுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த விபத்து குறித்து போலீசார் கூறும்போது, ”இந்த கட்டடம் இன்று காலை 3 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த அடுக்கு மாடி கட்டடத்த்தில் மொத்தம் 8 குடும்பங்கள் கடந்த ஒருவருடமாக வசித்து வந்துள்ளனர். இந்த கட்டட இடிபாடுக்குள் பலர் சிக்கி உள்ளனர். தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.