Home நாடு அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: திங்கட்கிழமை தொடர்கிறது!

அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: திங்கட்கிழமை தொடர்கிறது!

524
0
SHARE
Ad

anwar-cloneபுத்ராஜெயா, அக்டோபர் 31 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் தண்டனைக்கு எதிராக அன்வார் தாக்கல் செய்திருந்த மனு மீதான வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக கூட்டரசு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசு தரப்பு சார்பில் டான்ஸ்ரீ முகமட் சஃபி அப்துல்லா தலைமையிலான குழு வரும் செவ்வாக்கிழமை தங்களது அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக, கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞரான சஃபி அப்துல்லா, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது குற்றவாளிக்கூண்டிற்குள் நின்று அன்வார் பேசிய அறிக்கைகளை சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப் துன் ரசாக்கில் முதல் விசாரணை அதிகாரி வரை அனைவரையும் அன்வார் இப்ராகிம் தாக்கும் படியான கருத்துக்களை தெரிவித்ததாகவும், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதியையும் அன்வார் சாடியதாகவும் சஃபி அப்துல்லா தனது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி அரிஃபின்  தலைமையிலான 5 பேர் கொண்டு நீதிபதிகள் குழு இன்று விசாரணை நடத்தியது.

மேலும் கடந்த இரண்டரை நாட்களாக அன்வார் தரப்பில் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் தலைமையிலான குழு தங்களது வாதங்களை நீதிபதிகள் முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.