Home வணிகம்/தொழில் நுட்பம் மந்த நிலையில் ஐரோப்பிய பொருளாதாரம் – லாயிட்ஸ் வங்கியின் 9000 ஊழியர்கள் பணி நீக்கம்!

மந்த நிலையில் ஐரோப்பிய பொருளாதாரம் – லாயிட்ஸ் வங்கியின் 9000 ஊழியர்கள் பணி நீக்கம்!

660
0
SHARE
Ad

europe

லண்டன், நவம்பர் 1 – பிரிட்டனின் புகழ்பெற்ற வங்கிகளில் ஒன்றான லாயிட்ஸ் வங்கி (LLOYDS BANK) தனது செயல்பாட்டை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் சுமார் 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

பிரிட்டனின் மிக முக்கிய வங்கியாகத் திகழ்ந்து வரும் லாயிட்ஸ் வங்கி, கடந்த சில வருடங்களாக பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து வருகின்றது. இந்நிலையில், லாயிட்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்த அந்நிறுவனத்தின் அதிகாரக் குழு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வங்கி முடிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் 2017-ம் ஆண்டிற்குள் வங்கியின் 9,000 பணியாளர்களை நீக்குவதன் மூலமாக நிறுவனத்திற்கு சுமார் 1 பில்லியன் பவுண்டுகளை சேமிக்க முடியும் என அந்நிறுவனத்தின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோன்று, கடந்த 2008-ம் ஆண்டிலும் நிதி நெருக்கடி காரணமாக, லாயிட்ஸ் குழுமம் சுமார் 10,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

cyprusBankநிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய வங்கிகள்:

நிதி நெருக்கடி நிலை பிரிட்டனின் லாயிட்ஸ் வங்கிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஐரோப்பிய வங்கிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. லாயிட்ஸ் குழுமம் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட கிளைகளை மூடியுள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்பட்ட நிதி நிலை நெருக்கடி தொடர்பான சோதனையில் 14 வங்கிகள் தோல்வி அடைந்துள்ளன.

இந்த நிதி நெருக்கடி நிலை உலகளாவிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்டாலும், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் சேர்ந்து விதித்த பொருளாதாரத் தடைகளும் காரணமாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.