Home படிக்க வேண்டும் 3 தனியார் மயமாதல் மாஸ் நிறுவனத்தை உயிர்பெறச் செய்யுமா? 

தனியார் மயமாதல் மாஸ் நிறுவனத்தை உயிர்பெறச் செய்யுமா? 

971
0
SHARE
Ad

AP I MYS MALAYSIA AIRLINESகோலாலம்பூர், நவம்பர் 3 – நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான மலேசியா ஏர்லைன்சின் இருப்பை, தக்க வைத்துக் கொள்ள முன்மொழியப்பட்ட தனியார் மயமாதல் எனும் முடிவு, நிறுவனத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மாஸ் நிறுவனத்தின் சிறு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றிற்கு 27 சென் மட்டுமே வழங்க முடியும் என்றும், இதற்கான முக்கிய முடிவுகள் விரைவில் நடக்க இருக்கும் அவசர பொது கூட்டத்தில் (EGM)-ல் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக ஆர்எச்பி நிறுவனத்தின் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அகமத் மக்பர் உஸ்மான் கூறுகையில், “மாஸ் நிறுவனம் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. பங்குதாரர்கள் தற்சமயம் தங்களது முதலீடுகளை திரும்ப எடுக்க முடியாத சூழல் உருவாகி  உள்ளது. எனவே தனியார் மயமாதல் மூலம் கிடைக்கும் பங்கு ஒன்றிற்கு 27 சென் என்ற சலுகையை ஏற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“தற்போதய நிலையில், மாஸை காப்பாற்றுவதற்கான ஒரே வழி தனியார் மயமாதல் ஆகும். இல்லை எனில் ‘கடன் தீர்க்க முடியவில்லை’ (Bankruptcy )  என்று அறிவித்தாக வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ” விரைவில் நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத்தில் தனியார் மயமாதல் எனும் முடிவு நிராகரிக்கப்பட்டால், முக்கிய பங்குதாரர்ரான கஸானா நேசனல் நிறுவனம், மறுசீரமைப்பிற்காக, மாஸ் நிறுவனத்தில் மேலும் முதலீடுகளை புகுத்த முன்வராது. இது  நிறுவனத்தை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கஸான வெளியிட்ட 12 அம்சங்கள் கொண்ட மறு சீரமைப்புத் திட்டத்திற்கு 6 பில்லியன் ரிங்கெட்டுகள் வரை செலவாகும். அதில் சிறு பங்குதாரர்களுக்கு  பங்கு ஒன்றிற்கு 27 சென் என்ற சலுகை மூலம் 1.4 பில்லியன் ரிங்கெட்டுகள் வரை கொடுக்க நேரிடும்.  தற்சமயம் இதனை சிறு பங்குதாரர்கள் ஏற்றுக் கொள்வதே நல்லது.”

“கடன் தீர்க்க முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டால் அது மாஸ் நிறுவனத்தின் நிலையை மேலும் மோசமடையச் செய்து விடும். இது சிறு பங்குதாரர்களுக்கும் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தும்.”

“எனவே, மாஸ் நிலை குறித்து நடைபெற இருக்கும் பொது கூட்டமே முடிவு  செய்யும்” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக சற்றே பொருளாதார நெருக்கடியில் இருந்த மாஸ் நிறுவனத்தை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது,  இந்த ஆண்டு நடந்த இரு பெரும் பேரிடர்கள் ஆகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.