வாஷிங்டன், நவம்பர் 3 – உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில்கேட்ஸ் மலேரியா மற்றும் எபோலா போன்ற கொடி நோய்களை கட்டுப்படுத்த ரூ.500 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் தொகையை அளித்துள்ளார்.
இது குறித்து மைக்ரோசாப்ட் முன்னாள் சிஇஓ 63-வது ஆண்டு விழாவில் பேசிய போது மலேரியா, நிமோனியா, பேதி போன்ற நோய்கள், மற்றும் ஒட்டுண்ணி தாக்கம் உள்ளிடட உயிர்கொல்லி நோய்களை கட்டுப்படுத்த கேட்ஸ் தொண்டு நிறுவனத்தில் இருந்து 2014ம் ஆடில் சுமார் 500 மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் எபோலா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்க உதவியதாகவும், மேலும் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த மருந்து பொருட்களை வழங்கவும் உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மலேரியாவை ஒழிக்க உறுதியோடு இருக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் சிறு வழிமுறைகளைக் கொண்டு மலேரியாவை தடுப்பது என்பது சாத்தியமற்றது. எனவே வரலாறு மூலம் மலேரியாவை தடுக்க வழி வகை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.