Home உலகம் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் – ஒபாமா! 

தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் – ஒபாமா! 

387
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், நவம்பர் 7 – அமெரிக்க இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொள்வதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். எனினும் தனது கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சி பெரும் சரிவை சந்தித்தது. அதிபர் ஒபாமாவின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அவர் மீது உள்ள வெறுப்பு காரணமாகவே எதிர்க்கட்சி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளதாகவும் பொது நோக்கர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த தோல்வி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்கிறேன். இது குடியரசுக் கட்சியினருக்கு மகிழ்ச்சியான தருணம்”.

#TamilSchoolmychoice

“எனினும், அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. தற்போது, அமெரிக்க மக்கள், எங்கள் மீது நம்பிக்கை இழந்து காணப்பட்டாலும், உண்மையில் நமது பொருளாதாரம் பிற நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாகவே உள்ளது.”

“உலகம் முழுவதுமுள்ள மிகச் சிறந்த வல்லுநர்கள், அமெரிக்காவிடம் தான் உள்ளனர். அவர்களை ஈர்க்கும் சக்தி அமெரிக்காவிடம் உள்ளது. அடுத்த, இரண்டு ஆண்டுகளில், என்னால் முடிந்தவரை நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் அரசின் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.”

“குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் நிறைந்த நாடாளுமன்றத்தில் பணியாற்றத் தயாராக உள்ளேன். எனினும், என்னால் கையெழுத்திட முடியாத தீர்மானங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என்பதையும், நாடாளுமன்றம் விரும்பாத முடிவுகளை நான் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் என்னால் உறுதியாகக் கூற முடியும். நான் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.