Home இந்தியா கருணாநிதியுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீர் சந்திப்பு!

கருணாநிதியுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீர் சந்திப்பு!

520
0
SHARE
Ad

elangovan-meets-karunaசென்னை, நவம்பர் 10 – தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி கருணாநிதி. குடும்பத்தின் பெரியவர் போன்று இருக்கும் அவர் அரசியல் எல்லைகளை கடந்த தலைவர்.”

#TamilSchoolmychoice

“அதனால் தான் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள நான் அவரை சந்தித்து வாழ்த்து பெறலாம் என்று வந்தேன். திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கருணாநிதியும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு அது” என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.