Home தொழில் நுட்பம் ‘ஸ்கைப்’-ல் நிர்வாணமாக காட்சி கொடுத்து சிக்கலில் மாட்டிய இளைஞர்!

‘ஸ்கைப்’-ல் நிர்வாணமாக காட்சி கொடுத்து சிக்கலில் மாட்டிய இளைஞர்!

624
0
SHARE
Ad

 

Skype Logoகோலாலம்பூர், நவம்பர் 10 – தனது பேஸ்புக்கில் புதிதாக நண்பர்கள் பட்டியலில் இணைந்த அழகிய பெண் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ‘ஸ்கைப்’-ல் நிர்வாணமாக நின்ற ஆடவர் ஒருவரை, அந்த காணொளியை இணையத்தில் வெளியிடப்போவதாக மர்ம கும்பல் மிரட்டியுள்ளது.

ஜான் டான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அந்த 30 வயதான நபருக்கு பேஸ்புக்கில் சபரினா லியங் என்ற பெண் நண்பர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு கடந்த நவம்பர் 6-ம் தேதி கோரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

தான் துபாயில் பிரபல தங்கும்விடுதி ஒன்றில் பணியாற்றுவதாகவும், விரைவில் மலேசியா வரவுள்ளதாகவும் அப்பெண் கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய டான் அப்பெண்ணை தனது பேஸ்புக்கில் இணைத்துக் கொண்டதோடு, அப்பெண்ணுடன் ‘ஸ்கைப்’ சேவை மூலமாகவும் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, டானை அப்பெண் நிர்வாணமாக நிற்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். நடக்கவிருக்கும் விபரீதம் புரியாத டான் அப்பெண் கூறியவற்றை மறுக்காமல் செய்துள்ளார்.

அதன் பின்னர் மறுநாள், டானுக்கு பல பிரச்சனைகள் உருவானது. பேஸ்புக்கில் சபரினாவாக இருந்த அந்த பெண் திடீரென ஓர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஆணாக மாற்றம் கண்டதோடு, டானின் நிர்வாண காணொளியின் யூடியூப் இணைப்பை உள்தகவல்பெட்டிக்கு அனுப்பி மிரட்டியிருக்கிறார்.

வெஸ்டர்ன் யூனியன் வங்கி கணக்கிற்கு 3000 ரிங்கிட் அனுப்புமாறு அந்த மர்ம நபரால் டான் பணம் கேட்டு மிரட்டப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், மசீச பொதுச்சேவை மற்றும் புகார்கள் பிரிவின் தலைவர் டத்தோஸ்ரீ மைக்கேல் சோங்கின் உதவியுடன் நேற்று செய்தியாளர்களிடம் தனக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து டான் விவரித்தார்.

டானுக்கு மிரட்டல் விடுத்த நபர் கொடுத்த வங்கிக் கணக்கு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவரின் பெயரிலும், அந்த யூடியூப் இணைப்பு பிரான்ஸ் நாட்டிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர், மலேசியன் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) அந்த காணொளியை யூடியூப்பில் இருந்து அகற்றியது.

கடந்த ஆண்டு மட்டும் இதே போன்று 15 புகார்களை தாங்கள் பெற்றதாகவும், இது போன்று செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் டத்தோஸ்ரீ மைக்கேல் சோங் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.