அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், எபோலா நோய் தாக்கியவர்களில் 70 சதவீதம் பேர் மரணமடைவதாகத் தெரிவிக்கப்படுவதால், உண்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
லைபீரியா நாட்டில் அந்த நோய் பாதித்த 6,619 பேரில் 2,766 பேர் உயிரிழந்தனர்.சியரா லியோனிலுள்ள 4,862 எபோலா நோயாளிகளில், 1,130 பேர் உயிரிழந்தனர். கீனியாவில், எபோலா தாக்கிய 1,760 பேரில் 1,054 பேர் அந்த நோய்க்கு பலியாகினர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments