Home கலை உலகம் குளியல் அறையில் வழுக்கி விழுந்து நடிகர் மீசை முருகேசன் மரணம்!

குளியல் அறையில் வழுக்கி விழுந்து நடிகர் மீசை முருகேசன் மரணம்!

726
0
SHARE
Ad

mqdefaultசென்னை, நவம்பர் 10 – நடிகர் மீசை முருகேசன் குளியல் அறையில் வழுக்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன் (85). இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வடபழனி குமரன்காலனி 9–வது தெருவில் உள்ள பாலாஜி அடுக்கு மாடிவீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், இரு வாரங்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது.

உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் ரத்தம் உறைந்து இருந்தது. சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீர் பாதிப்புகளும் அவருக்கு இருந்தன.

#TamilSchoolmychoice

தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தானர். ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தார். இதையடுத்து மீசை முருகேசன் நேற்று மாலை 4 மணிக்கு உயிர் இழந்தார்.