Home Slider மலேசியா, சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் தமிழ் நாட்டு கரும்பு

மலேசியா, சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் தமிழ் நாட்டு கரும்பு

991
0
SHARE
Ad

மதுரை,டிச.15 – பொங்கல் பண்டிகை என்றாலே முக்கியமான இடம்பெறுவது கரும்பும், சர்க்கரை பொங்கலும் தான். இந்த பொங்கல் பண்டிகையையொட்டி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு தமிழகத்தில் விளைவிக்கப்படும் கரும்புகள் அதிகப்படியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

160 ஏக்கரில் அளவில் சின்னமனூரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் இங்கு நூறு ஆண்டுகளாக செங்கரும்பை பயிரிட்டு வருகின்றனர். மண்ணின் தன்மைக்கு ஏற்ப குணம் மாறாமல், பெரியாற்று பாசனத்தில், விளைவிக்கப்படும் செங்கரும்புக்கு தித்திப்பு சுவை அதிகமாம் இதனால் கரும்பு சந்தையில் சின்னமனூர் கரும்புக்கு கிராக்கி அதிகமாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர், மலேசியாவுக்கு சின்னமனூர் கரும்பு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக கர்நாடக கரும்பு வியாபாரிகள் சின்னமனூரில் முகாமிட்டு, கொள்முதல் செய்கின் றனர். பின், பெங்களூருவில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

#TamilSchoolmychoice

பொங்கலை முன்னிட்டி பாரம்பரியமாக வீடுகளில் கரும்பு கட்டி வைக்கப்படும் பழக்கத்தை அதிகமான மலேசியர்களும், சிங்கப்பூரியர்களும் பின்பற்றத் தொடங்கியிருப்பதால் பொங்கல் திருவிழா காலங்களில் கரும்பின் தேவை அதிகரித்துள்ளது.