Home கலை உலகம் அஸ்ட்ரோவில் 10 புதிய அலைவரிசைகள் அறிமுகம்!

அஸ்ட்ரோவில் 10 புதிய அலைவரிசைகள் அறிமுகம்!

642
0
SHARE
Ad

IMAG0538

கோலாலம்பூர், நவம்பர் 12 – மலேசியாவின் முன்னணி தொலைக்காட்சியான அஸ்ட்ரோ வரும் ஞாயிறு முதல் 10 புதிய அலைவரிசைகளை அறிமுகப்படுத்தி தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிபடுத்தவுள்ளது. அதிலும் குறிப்பாக 10 புதிய அலைவரிசைகளில் 8 அலைவரிசைகள் எச்டி(HD) எனப்படும் துல்லிய ஒளிபரப்பு மற்றும் 2 அலைவரிசைகள் எஸ்டி (SD) எனப்படும் வழக்கமான ஒளிபரப்பு சேவை ஆகும்.

இதற்கான அறிமுக நிகழ்வு நேற்று மாலை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சன்வே சோஜு (Sunway SOJU) அரங்கத்தில் மிகவும் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

நாட்டின் பல்வேறு பத்திரிகைகளைச் சேர்ந்த செய்தியாளர்கள், அஸ்ட்ரோ நிர்வாகிகள், முன்னணி ஊடகங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் என இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

இந்த 10 புதிய அலைவரிகள் அறிமுகத்தை அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாகி டத்தோ ரோஹானா ரோசான், தலைமை இயக்க அதிகாரி ஹென்ரி டான் மற்றும் தலைமை வர்த்தக அதிகாரி லியூ சிவீ லின் ஆகிய மூவரும் பிரம்மாண்டமான அரங்கத்தில், வண்ண விளக்குகள் ஒளிர, அதிரும் இசையுடன் அறிமுகம் செய்தனர்.

ஜிஎஸ்டி-யை பொறுத்து அஸ்ட்ரோ கட்டணங்கள் உயராது

IMAG0576

அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹென்ரி டான், “வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கத்தோடு இந்த புதிய அறிமுகங்கள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பிவிஆர், எச்டி மற்றும் அஸ்ட்ரோ ஆன் தி கோ போன்ற தளங்கள் வழியாகப் பெற்று வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.அது மட்டுமின்றி அஸ்ட்ரோ பேன்ஸ் பேக் ( மாதம் 99 ரிங்கிட்) மற்றும் அஸ்ட்ரோ சூப்பர் பேக் ப்ளஸ் ( மாதம் 178 ரிங்கிட்) ஆகிய இரு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதனிடையே, அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள பொருட்கள் மற்றும் சேவை வரியை (GST) பொறுத்து அஸ்ட்ரோ தனது கட்டணத்தை உயர்த்துமா? என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த  டத்தோ ரோஹானா ரோசான், “ஏற்கனவே அஸ்ட்ரோ 6 % சேவை வரி விதிப்பதால் ஜிஎஸ்டி-யை பொறுத்து அஸ்ட்ரோ தனது கட்டணங்களை உயர்த்தாது” என்று கூறினார்.

அஸ்ட்ரோவில் 48 எச்டி அலைவரிகள்

IMAG0541

விளையாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ அஸ்ட்ரோ பேன்ஸ் பேக் ( மாதம் 99 ரிங்கிட்) திட்டமும், உள்நாட்டு மற்றும் ஹாலிவுட்டின் அண்மைய நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ அஸ்ட்ரோ சூப்பர் பேக் ப்ளஸ் ( மாதம் 178 ரிங்கிட்) திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பு எச்டி வாடிக்கையாளர்கள் இந்த புதிய 10 அலைவரிசைகளையும் நவம்பர் 16-ம் தேதி முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை இலவசமாகக் கண்டு மகிழலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை அஸ்ட்ரோ ப்ளஸ் என்ற புதிய தளம் வழியாக அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ற காணொளி சேவை (Video On Demand service) மூலமாக பெற்று பயனடையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 -ம் ஆண்டு 4 எச்டி அலைவரிசைகளுடன் தொடங்கிய அஸ்ட்ரோ, தற்போது 48 அலைவரிசைகளாக உயர்ந்துள்ளது.

அஸ்ட்ரோவின் 180 அலைவரிசைகளை மலேசியாவில் மொத்தம் 402 மில்லியன் குடும்பங்கள் கண்டு களிக்கின்றனர் மற்றும் நாடெங்கிலும் 16 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– ஃபீனிக்ஸ்தாசன்