Home நாடு எம்எச் 17 விமானப் பேரிடர் நிகழ்ந்த பகுதிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் புடினிடம் நஜிப் வலியுறுத்து

எம்எச் 17 விமானப் பேரிடர் நிகழ்ந்த பகுதிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் புடினிடம் நஜிப் வலியுறுத்து

527
0
SHARE
Ad

pudinபெய்ஜிங், நவம்பர் 12 – எம்எச் 17 விமானப் பேரிடர் நிகழ்ந்த பகுதிக்குள் நுழைய முழுமையாக அனுமதிக்க வேண்டும் ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இப்பேரிடர் தொடர்பில் முழுமையான ஆய்வும் விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என்றும், இவ்வழக்கை முடிப்பதற்கு முன்னர் மேலும் பல பணிகள் மீதமுள்ளன என்பதை ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இருதரப்பும் உணர்ந்து கொள்ளும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“இப்பேரிடருடன் சம்பந்தப்பட்ட பயணிகளின் ரத்த உறவுகள் எழுப்பும் ஏராளமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டத்தில் நாம் உள்ளோம். எனவே விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்த முடிவுக்கு வர உங்களது உதவி கிடைக்குமென நம்புகிறோம்,” என பெய்ஜிங்கில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது அதிபர் புடினிடம் பிரதமர் நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பேரிடர் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அதிபர் புடினும் ஒப்புக் கொண்டுள்ளதாக பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது.