Home உலகம் தென்கொரிய கப்பல் விபத்து : தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை

தென்கொரிய கப்பல் விபத்து : தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை

537
0
SHARE
Ad

south-korea-shipசியோல், நவம்பர் 12 – தென் கொரியாவில் நடந்த கப்பல் விபத்தின்போது பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காத கப்பல் கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 300 பேர் பலியாயினர். அவர்களில் சுமார் 250 பேர் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள்.

south korea-shipமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தின் போது கப்பலில் இருந்த பயணிகளுக்கு சரியாக பாதுகாப்பு அளிக்காமல் கப்பல் கேப்டன் தப்பித்தார் . லீ ஜூன் சியோக் எனும் அந்த கேப்டன் பலமுறை இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்;

#TamilSchoolmychoice

“இந்த விபத்து எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியவில்லை. கப்பலில் இருப்பவர்கள் பலியாகட்டும் என்ற எண்ணத்துடன் நான் தப்பிக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

ferry-korea-south-accident.si_இந்நிலையில் ஐந்து மாத விசாரணைக்கு பின் இவ்வழக்கில் தீர்ப்பு அளித்த மூவர் குழு, கப்பல் கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இவ்வழக்கில் கேப்டனுக்கு எதிராக வாதிட்ட வழக்கறிஞர்கள், விபத்தின் போது கப்பலின் கேப்டன் லீ, பயணிகளை காப்பாற்ற கப்பலில் இருந்த பாதுகாப்பு படகுகள், உயிர் காக்கும் ஆடைகள், தப்பிக்க வழிமுறை தெரிவிக்கும் சாதனங்களை பயன்படுத்தாமல், முதலில் தப்பிக்க முயன்றதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என வாதிட்டது குறிப்பிடத்தக்கது.