Home கலை உலகம் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைய மறுத்த ஷாருக்கான்!

மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைய மறுத்த ஷாருக்கான்!

609
0
SHARE
Ad

Narendra_modiபுதுடெல்லி, நவம்பர் 13 – பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணையப் போவதில்லை என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அப்போது அமிதாப்பச்சன், கமல்ஹாசன், டெண்டுல்கர் உட்பட 9 பிரபலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று இந்த 9 பேர் மட்டுமின்றி நாடு முழுவதும் பல பிரபலங்கள் துடைப்பத்தைக் கையில் எடுத்துக் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முதலில் நாம் நம்மை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் நான் இணையப் போவதில்லை. அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரபலங்களின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் ஷாருக்கான்.