Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர்ஏசியா இந்தியா சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

ஏர்ஏசியா இந்தியா சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

553
0
SHARE
Ad

AirAsiaபுதுடெல்லி, நவம்பர் 13 – ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் அதிரடி விலைக் குறைப்பில் ஈடுபட்டுள்ளது.  உள்நாட்டுப் போக்குவரத்தின் முக்கிய முனையங்களுக்கு ஒரு வழிக் கட்டணமாக ரூபாய் 699-ஐ (அனைத்து வரிகளும் உட்பட) நிர்ணயித்துள்ளது.

மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா சமீபத்தில் விளம்பர நடவடிக்கைகளுக்காக அதன் முக்கிய போக்குவரத்து முனையங்களுக்கு 3 மில்லியன் இருக்கைகள் இருப்பதாக அறிவித்தது.

இதன் மூலம் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா  மூலமாக  இந்தியாவின் சென்னை, கொல்கத்தா, திருச்சிராப்பள்ளி மற்றும் ஹைதராபாத்திற்கும், தாய் ஏர் ஏசியா விமானங்கள் மூலமாக சென்னையில் இருந்து பாங்காக்கிற்கும் ஒரு வழிக் கட்டணமாக ரூபாய் 2599-ல் பயணம் மேற்கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

தாய் நிறுவனமான ஏர் ஏசியாவின் விலைக் குறைப்பு நடவடிக்கையை ஏர் ஏசியா இந்தியா நிறுவனமும் பின்பற்றி, உள்நாட்டு விமான போக்குவரத்தில் விலைக் குறைப்பில் ஈடுபட்டுள்ளது.

பெங்களூரில் இருந்து சென்னை, கொச்சி , கோவா , ஜெய்பூர்  மற்றும் சண்டிகர் முனையங்களுக்கு ஒரு வழிக் கட்டணமாக ரூபாய் 699-ஐ ஏர் ஏசியா இந்தியா நிர்ணயம் செய்துள்ளது.

இதற்கான கட்டண முன்பதிவு நவம்பர் 10-ம் தேதி தொடங்கி நவம்பர் 16-ம் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவைப் பயன்படுத்தி 2015 -ம் ஆண்டு ஜூன் 10 முதல் 2016-ம் ஆண்டு ஜனவரி 17 தேதி வரை பயணம் செய்யலாம்.

இது தொடர்பாக ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் மிட்டு சண்டில்யா கூறுகையில், “ஒவ்வொரு இந்தியரும் மலிவு விலையில் விமான போக்குவரத்தினை மேற்கொள்ள எங்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியா முயற்சி இதுவாகும்” என்று கூறியுள்ளார்.