கோலாலம்பூர், நவம்பர் 13 – கடந்த மே மாதம் துருக்கி இஸ்தான் புல்லில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் குறைத்துக் கொண்ட பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங், தனக்கு உடல்நிலை முன்பு போல் இல்லை என்று மனம் திறந்து அறிவித்துள்ளார்.
பல இடங்களில் சொற்பொழிவு நடத்துமாறு தமக்கு பல இடங்களில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டு இருப்பதாகவும், உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவற்றை மறுத்து வருவதாகவும் ஹாடி கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஹாடி தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மந்திரி பெசார் நியமன விவகாரத்தில் கூட பக்காத்தான் தலைவர்களுடன் சந்திப்புகளை ஹாடி தவிர்த்ததாகக் கூறப்படுகின்றது.
முஸ்லிம் சமூகத்தினரின் அனைத்துலக மாநாட்டில் உரையாற்றுவதற்காக மே மாத இறுதியில் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சென்றிருந்த ஹாடி மூச்சுத் திணறலுக்கு ஆளான நிலைமையில் கடந்த மே 30ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.