Home நாடு பழனிவேல் தலைமைத்துவத்தை கவிழ்க்கத் திட்டமா? மறுக்கிறார் சரவணன்

பழனிவேல் தலைமைத்துவத்தை கவிழ்க்கத் திட்டமா? மறுக்கிறார் சரவணன்

503
0
SHARE
Ad

Datuk-M.-Saravananகோலாலம்பூர், நவம்பர் 13 –  டத்தோஸ்ரீ பழனிவேலை மஇகா தேசியத் தலைவர் பதவியில் இருந்து கீழிறக்கும் திட்டம் ஏதுமில்லை என அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ சரவணன் தெரிவித்தார். வதந்திகளைப் பரப்பும் சிலரே இது போன்ற தகவல்களைப் பரப்பி வருவதாகவும், அவை வெறும் அவதூறுகளே என்றும் அவர் கூறினார்.

“மஇகா 60 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கட்சி. அதில் உள்ள 4 ஆயிரம் கிளைத் தலைவர்களால் தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் டத்தோஸ்ரீ பழனிவேல். அவரது தலைமைத்துவத்தை கவிழ்க்க திட்டமிடப்படுவதாக கூறப்படுவது வெறும் அவதூறு மட்டுமே,” என்றார் சரவணன்.

வரும் 2016ஆம் ஆண்டு தொடக்கத்தில், தாம் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக பழனிவேல் முன்பே கூறியிருப்பதை அவர் கோடிகாட்டினார்.

#TamilSchoolmychoice

“இதுதான் தலைவர் பதவியில் தமக்கு கடைசி தவணை என்று அவர் (பழனிவேல்) தெரிவித்துள்ளார். 2016 தொடக்கத்தில் பதவியிலிருந்து விலகப் போவதாக அவரே கூறியுள்ள நிலையில், அவரை கவிழ்க்க வேண்டிய அவசியம் என்ன?  அவர் கண்ணியமான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதற்கு முன் கட்சித் தலைவராக இருந்த யாரும் தங்களது ராஜினாமா தேதியை முன்கூட்டியே அறிவித்தது கிடையாது,” என்றார் சரவணன்.

-பெர்னாமா