Home நாடு கேஎல்ஐஏ விமான நிலையத்தில் 851,200 ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு!

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் 851,200 ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு!

592
0
SHARE
Ad

Immigresen KLIA 440 x 215செப்பாங், நவம்பர் 13 – கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்தில் ஒரே நாளில் இரண்டு கடத்தல் சம்பவங்களை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை பயணிகளில் ஒருவரது பையில் இருந்து 851,200 ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருட்களை கடந்த திங்கட்கிழமை யும், மற்றொரு பையில் 10 காற்று துப்பாக்கிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 32 வயதான கென்யா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை இயக்குநர் டத்தோ சிக் ஓமார் சிக் லிம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மெத்தாம்பெடாமைன் என்ற போதைப் பொருளை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் சேர்ப்பதற்காக அந்த நபர் கடத்திக் கொண்டு வந்துள்ளார் என்றும் சிக் ஓமார் தெரிவித்தார்.

மற்றொரு சம்பவத்தில், திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில், கேஎல்ஐஏ-வில் அமைந்திருக்கும் அஞ்சல் சேவைக்கு வந்த பையில் 4 பெரிய துப்பாக்கிகள் மற்றும் 6 சிறிய ரக காற்றுத் துப்பாக்கிகளை சுங்கத்துறை கைப்பற்றினர்.

இந்த துப்பாக்கிகளும் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஒருவருக்கு வந்ததாகவும், கடைசி நேரத்தில் இந்த பொருட்களை வாங்க சம்பந்தப்பட்ட நபர் வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும், அந்த நபரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றது குறிப்பிடத்தக்கது.