உத்திர பிரதேசம், நவம்,பர் 13 – உத்தர பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் பெண்ணை நடனம் ஆடவைத்து, ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகஷான்பூர் மாவட்டத்தில் திருவிழாவை ஒட்டி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர், துப்பாக்கி முனையில் ஒரு மணிநேரம் அங்கிருந்த பெண்ணை நடனம் ஆட வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
காவலர் மது அருந்தி விட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி ஆட வைத்ததை அங்கிருத்த பார்வையாளர் ஒருவர் காணொளி எடுத்துள்ளார். மேலும் அந்த பெண் நடனம் ஆடும் போது ரூபாய் நோட்டுகளை அவர் மீது வீசியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
http://youtu.be/YaGfNxxPpXM