Home வாழ் நலம் உடல் எடையை குறைத்தால் மாரடைப்பை தடுக்கலாம்!

உடல் எடையை குறைத்தால் மாரடைப்பை தடுக்கலாம்!

547
0
SHARE
Ad

health.jpg-நவம்பர் 13 – இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. புதுபுது நோய்களால் ஏராளமானோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு  என்பது திடீரென ஏற்பட்டு உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய்.

முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம். மனிதன் வளர வளர உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படிகிறது. இது கொஞ்சம்  கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது.

இதனால்  மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இனப்பெருக்க ஈஸ்ட்ரோஜென் எனும் அமிலம் பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன.

#TamilSchoolmychoice

மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை. குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு, அதிக கோபம் போன்றவைகள்.

healthஅறிகுறிகள்:

மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை போன்று ஒத்திருக்கலாம். நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

healthhமாரடைப்பை தடுக்க சில வழிகள்:

* உணவில் ஆரோக்கியம், உப்பு, கொழுப்பு பொருட்கள் குறைவாகவும் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

* அளவுக்கு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.

* உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்ய வேண்டும்.

* புகைப்பிடித்தலை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.

* நீரிழிவு நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையை  கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.