Home உலகம் மெக்சிகோவில் 43 மாணவர்கள் கடத்தப்பட்ட வழக்கு: மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்!

மெக்சிகோவில் 43 மாணவர்கள் கடத்தப்பட்ட வழக்கு: மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்!

657
0
SHARE
Ad

mexico004ரியோடி ஜெனீரோ, நவம்பர் 14 – வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த செப்டம்பர் மாதம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் 43 பேரை ஆயுத கும்பல் ஒன்று கடத்தி சென்றது.

அவர்கள் பற்றி எந்தவொரு விபரமும் தெரியாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் ஆயுத கும்பலால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் மெக்சிகோவின் லுகுலா நகரத்திலும், குயர்ரோ மாகாணத்திலும் பயங்கர கலவரம் வெடித்துள்ளது.

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் போதை மருந்து கும்பலும், ஆயுத கும்பல்களும் அதிபயங்கர குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் பலர் குயர்ரோ மாகாணத்தில் உள்ள இகுவாலா நகரில் போதை கும்பலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

அதன் காரணமாக அந்த கும்பல் 43 மாணவர்களை கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும் இதற்கு அந்நாட்டு காவல் துறையினர் சிலரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதனால் லுகுலா நகரத்திலும் குயர்ரோ மாகாணத்திலும் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம்  குயர்ரோ மாகாணத்தின் சட்டசபைக் கட்டிடத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது.

மாணவர்கள் கடத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகி உள்ள நிலையில், அரசு இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.