சென்னை, நவம்பர் 14 – லிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினி.
மேலும் ஆசிய அளவில் சம்பளமாக அதிக தொகை பெறும் முதல் நடிகரும் ரஜினிதான். லிங்கா படம் ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமை ரூ 165 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
இசை வெளியீட்டு உரிமைக்கு ரூ 7 கோடி தரப்பட்டுள்ளது. பெரும் தொகைக்கு இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை விலை பேசப்பட்டு வருகிறது. படத்தை முனிரத்னா வழங்க ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.
இதில் இன்னொரு தயாரிப்பாளராக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா உள்ளார். படத்தின் லாபத்தில் அவருக்கும் ஒரு பங்கு தரப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரி செலுத்தப்பட்ட பிறகு, காசோலை மூலம் இந்தத் தொகை தரப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் இந்த அளவு சம்பளம் பெறும் ஒரே நடிகர் ரஜினிதான்.
சந்திரமுகி படத்திலிருந்து இந்த சாதனையை அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆசிய அளவிலும் அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிதான் என சினிமா வட்டார செய்திகள் தெரிவித்தன.