Home வாழ் நலம் கண் குறைபாட்டை தீர்க்கும் வெந்தயக்கீரை!

கண் குறைபாட்டை தீர்க்கும் வெந்தயக்கீரை!

649
0
SHARE
Ad

ht2200நவம்பர் 14 – வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு தொல்லை போகும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று வலி இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் சேர்க்க வேண்டும்.

#TamilSchoolmychoice

1-IMG_2514எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து லேசாகக் கிளறிக் பெண்களுக்கு கொடுத்தால் வயிற்று பிரச்சனை மற்றும் கண் குறைபாடுகளை குணமாக்கும்.

வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ சக்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையும். வெந்தயக்கீரையில் 49 நார்ச்சத்துக்கள் உள்ளன.