Home நாடு சிறை இயக்குநருக்கு எதிரான உதயகுமாரின் மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி!

சிறை இயக்குநருக்கு எதிரான உதயகுமாரின் மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி!

717
0
SHARE
Ad

UTHAYAKUMAR

கோலாலம்பூர், நவம்பர் 14 – ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயக்குமாரை அரசியல் குற்றங்கள் புரிந்தவர்கள் இருக்கும் அறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அதனை பின்பற்றாத காஜாங் சிறைச்சாலை இயக்குநர் மீது நீதிமன்ற அவமதிப்பிற்காக வழக்கு தொடுக்க உதயகுமாருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 13-ம் தேதி, காஜாங் சிறைச்சாலை இயக்குநர் அப்துல் வாஹாப் அப்துல் காசிம் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறியது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி டத்தோ முகமட் அஸ்மான் ஹுசைன் உத்தரவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் மீது இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் உதயகுமாரின் மனுவை நீதிபதி நிராகரித்தார்.

தேச நிந்தனைக் குற்றத்திற்காக ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயக்குமார் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போத, பயங்கர குற்றவாளிகள் இருந்த அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அதனை எதிர்த்து உதயகுமார் தாக்கல் செய்திருந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்று அவரை அரசியல் குற்றங்கள் புரிந்தவர்கள் இருக்கும் அறைக்கு மாற்றுமாறு கடந்த வருடம் செப்டம்பர் 9-ம் தேதி, தீர்ப்பளித்ததை இன்று நீதிபதி முகமட் அஸ்மான் உறுதிப்படுத்தினார்.

மேலும், முதுகுத் தண்டுவடப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த உதயகுமாரை கெபாங்சான் மலேசியா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிகிச்சைக்காக சேர்க்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கும், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கும் இடையே, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு உதயக்குமார் எழுதிய கடிதத்தில், மலேசியாவில் ஏழை இந்திய சமுதாயம் சமூக ரீதியில் ‘இன ஒழிப்பு’ செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு காஜாங் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17-ம் தேதி, உதயகுமாரின் மேல் முறையீட்டு மனுவை விசாரணை நீதிமன்றம் அவரது தண்டனையை 6 மாதங்களாகக் குறைத்தது.

அதனைத் தொடர்ந்து உதயகுமார் கடந்த அக்டோபர் 3-ம் தேதி விடுதலையானார்.