Home நாடு ஜகார்த்தா சிறையில் இருந்து முன்னாள் தீவிரவாதி விடுதலை! சொந்த ஊரான ஜோகூர் திரும்பினார்!

ஜகார்த்தா சிறையில் இருந்து முன்னாள் தீவிரவாதி விடுதலை! சொந்த ஊரான ஜோகூர் திரும்பினார்!

535
0
SHARE
Ad

jail-prisonகோலாலம்பூர், நவம்பர் 15 – இந்தோனேசியா சிறையில் இருந்து விடுதலை ஆன முன்னாள் ஜெமா இஸ்லாமியா இயக்கத்தைச் சேர்ந்த வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற தீவிரவாதி தௌபிக் அப்துல் ஹாலிம் மீண்டும் ஜோகூருக்கு திரும்பியுள்ளார்.

39 வயதான தௌபிக், ஜகார்த்தாவிலிருந்து கடந்த நவம்பர் 12-ம் தேதி, பயணிகள் விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்திறங்கினார்.

புக்கிட் அமான் அதிகாரிகள் மற்றும் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் கேஎல்ஐஏ விமான நிலையத்தில் இருந்து தௌபிக்கை அழைத்துச் சென்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த 2001-ம் ஆண்டு ஜகார்த்தாவிலுள்ள வணிக வளாகம் ஒன்றை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்த குற்றத்திற்காக தௌபிக் 12 ஆண்டு இந்தோனேசியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது தண்டனைக் காலம் நிறைவடைந்து அவரது சொந்த ஊரான ஜோகூர் மாநிலத்திற்கு தனது குடும்பத்தை காண தௌபிக் திரும்பியுள்ளார்.

மலேசியாவிற்கு திரும்பிய தௌபிக் மிகவும் அமைதியாக காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், அவரை மலேசிய தீவிரவாத ஒழிப்புப் பிரிவு தொடர்ந்து கண்காணிக்கவுள்ளது. காரணம் தௌபிக்கின் உறவினரான மார்வான் என்று அழைக்கப்படும் சுல்கிப்ளி அப்துல் கீர், அனைத்துலக தீவிரவாத ஒழிப்பு துறையினரால் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளி ஆவார்.

இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ வழங்கிய பொதுமன்னிப்பின் பேரில், தௌபிக் உட்பட 350 முன்னாள் ஜெமா இஸ்லாமியா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிறையில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.