Home நாடு “அடுத்த பொதுத்தேர்தல் பேரிடராக அமையும் வாய்ப்பு” – மஇகா தலைவர்களுக்கு சரவணன் எச்சரிக்கை

“அடுத்த பொதுத்தேர்தல் பேரிடராக அமையும் வாய்ப்பு” – மஇகா தலைவர்களுக்கு சரவணன் எச்சரிக்கை

562
0
SHARE
Ad

Datuk saravananகிள்ளான், நவம்பர் 17 – மஇகா இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று அக்கட்சியின் உதவித்தலைவர் டத்தோ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கட்சித் தலைவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று செனட்டர் டத்தோ எஸ்.ஏ விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட சரவணன் அந்நிகழ்வில் பேசுகையில், “கட்சி செயல்படுவதை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். இந்திய சமுதாயத்திடமிருந்து வரும் இந்த கோரிக்கைகளை கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அப்படி மக்கள் குரல்களை கேட்டுக்கொண்டு இருக்கும் தலைவர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் சரவணன் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் அடுத்த பொதுத்தேர்தல் பேரிடராக அமையும் என்றும் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.