Home நாடு ‘அல்லாஹ்’ மேல்முறையீடு ஜனவரி 21-ம் தேதி விசாரணை – கூட்டரசு நீதிமன்றம் அறிவிப்பு

‘அல்லாஹ்’ மேல்முறையீடு ஜனவரி 21-ம் தேதி விசாரணை – கூட்டரசு நீதிமன்றம் அறிவிப்பு

689
0
SHARE
Ad

Herald 1கோலாலம்பூர், நவம்பர் 17 – ‘தி ஹெரால்ட்’ வார இதழில் கடவுளைக் குறிக்க் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்திய விவகாரத்தில், மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கத்தோலிக்க தேவாலயம் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையை வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு கூட்டரசு நீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த ஜூன் 23 -ம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கத்தோலிக்க தேவாலயம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை 7 உறுப்பினர்கள் அடங்கிய கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 14-ம் தேதி, கத்தோலிக்க வார இதழான  ‘தி ஹெரால்ட்’ ல் கடவுளைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று புத்ரஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice