இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக சுனாமி எச்சரிகை விடுத்தனர். நேற்று காலை 10.33 மணியளவில் அங்குள்ள தீவு நகரான கிஸ்போர்னிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
அந்நாட்டின் கீழ் முனையில் உள்ள வடக்கு தீவுகள் முதல் மேல் முனையில் இருக்கும் தெற்கு தீவுகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக நியூசிலாந்து நிலநடுக்க கண்காணிப்பு சேவை மையம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலப்பரப்பில் இருந்து நீண்ட தூரத்திலும், கடலுக்கடியே அதிக ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பில்லை என அந்நாட்டு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறினார்.