Home வாழ் நலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை!

970
0
SHARE
Ad

datesநவம்பர் 18 – பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் மிக்கது பேரிச்சை. தொடர்ந்து பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். அன்றாடம் பேரிச்சம் பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

Medjool-Dates-NEW1காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும். உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும். உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

#TamilSchoolmychoice

தினசரி 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு, வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடல் பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு.

dates-குழந்தைகளுக்கு பேரிச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து தந்தால் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெண்களுக்கு பலகீனத்தைப் போக்க பேரிச்சம் பழத்தை அதிகம் உட்கொள்வது நல்லது.