சென்னை, நவம்பர் 18 – எனக்கு நிச்சயதார்த்தம் ஆனதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. அப்படி நடந்தால் முதல் தகவல் தெரிவிப்பது நானாகத்தான் இருக்கும் என்று டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார் திரிஷா.
உள்ளே வெளியே மாதிரி ஆகிவிட்டது திரிஷா – வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம். முன்னணி நாளிதழ்கள் உள்பட அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை படத்துடன் வெளியிட்டுவிட்டார்கள்.
ஆனால் செய்தியை உறுதிப்படுத்த வேண்டிய திரிஷாவும் அவரது அம்மாவும் முதலில் மவுனமாக இருந்தனர். இன்று மறுப்பு தெரிவித்துள்ளனர். திரிஷா அம்மா முதலில் மறுப்பு தெரிவித்தார்.
#TamilSchoolmychoice
இப்போது திரிஷா டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், ‘எனக்கு நிச்சயதார்த்தம் என்று வெளியான செய்திகளில் உண்மையில்லை. அப்படி நடந்தால் அந்த செய்தியைச் சொல்லும் முதல் ஆள் நான்தான்,’ என்று கூறியுள்ளார்.