Home இந்தியா தீவிரவாதத்தை முறியடிக்க உலக நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் – மோடி

தீவிரவாதத்தை முறியடிக்க உலக நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் – மோடி

482
0
SHARE
Ad

modi721ஆஸ்திரேலியா, நவம்பர் 18 – உலகளாவிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள, அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சிறப்பு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு மிகச்சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

இந்தியாவில் முன்பு இருந்த பொருளாதார சூழல் தற்போது மாறிவிட்டது என்றும், ஒருங்கிணைந்த பொருளாதாரத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஆஸ்திரேலியா திகழ்கிறது என்று கூறிய பிரதமர், இரு நாடுகளிடையே அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேற வேண்டும் என வலியுறுத்தினார்.

தீவிரவாதம்,உலக நாடுகள் அனைத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று கவலை தெரிவித்த நரேந்திர மோடி, இதனை முறியடிக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பிராந்திய அமைதியால், மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ள நாடுகள், தீவிரவாதம் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பது முக்கிய பணியாகும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார். தொடர்ந்து, ஆஸ்திரேலிய பயணத்தின் இறுதிக் கட்டமாக பிரதமர் மோடி மெல்பேர்ன் சென்றடைந்தார்.