‘ஸ்னாப்கேஷ்’ (Snapcash) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வசதி மூலம் பயனர்கள் மிக எளிதாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். ஸ்னாப்கேஷ் திரையில் பயனர்கள் தங்கள் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் தோன்றும் திரையில் தேவையான தொகையை பதிவு செய்து ‘சென்ட்’ (Send) பொத்தானை அழுத்துவதன் மூலமாக மிக எளிதான பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும் .
தற்சமயம் இந்த சேவை அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதனை 18 வயத்துக்கு மேற்பட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயனர்களின் வங்கி கணக்கு எண்ணை சேமித்தல், பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்துதல் போன்றவற்றினை சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஸ்கொயர்’ (Square) எனும் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.
பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயலி மற்றும் கருவிகள் மூலமாக பணப்பரிமாற்றத்தை தொடங்கி உள்ள நிலையில், ஸ்னாப்சேட்டும் அந்த வரிசையில் புதியதாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.